பொதிகை மலையில் இருந்து புறப்பட்ட அகத்திய மாமுனி, ‘ஓரிதழ்ப்பூ’ பற்றிய விளக்கம் பெற வருவதாகக் கதை துவங்கி, வெவ்வேறு விரசமான விளங்கங்களைப் பெற்று, திருவண்ணாமலையில் ரமணருடன், ‘அப்பளப் பாட்டு எழுதியதில் தப்பில்லையா’ (பக். 45) என வினவி, ‘ஓரிதழ்ப்பூ இம்மலை தானோ.
இயற்கையின் ஓரிதழ்ப்பூ அண்ணாமலை தான் (பக். 65) என்று புரிந்து கொள்வதாக முடியும் தறுவதாயில், அதற்குப் பின் பல விரசமான கற்பனைகளும், கனவுகளும் கலந்த மாதிரி கதையை முடிக்கத் தெரியாமல், எங்கெங்கோ தன் இனிய நடையால் நுாலாசிரியர் வாசகர்களை அழைத்துச் செல்கிறார்.
வலைப்பக்கத்தில் வெளியான கதை என்பதால் நுாலாசிரியர் தன் வீழ்ச்சியை சமாளித்துக் கொண்டுள்ளார்.
எழுத்தாளுமையுள்ள நுாலாசிரியர் விரசம் தவிர்த்து ஜனரஞ்சமாக, மேம்பட்ட நிலையில் எழுதியிருந்தால் இன்னும் தரமாக இருக்கும்.
– பின்னலுாரான்