நாவல்களில் பெண்களின் பிரச்சனைகள், போராட்டங்கள், அதற்கான நிரந்த தீர்வு ஆகியவற்றை, நாவலாசிரியர் திலகவதி எப்படியெல்லாம் பதிவு செய்துள்ளார் என்பதை ஆய்வு செய்துள்ள நூல்.
ஒரு பெண்ணின் அறிவு தெளிவு, இந்த சமுதாயம் மட்டுமின்றி, நாட்டின் எதிர்காலத்தையே மாற்றும் என்பதை, திலகவதி நாவல்களில் இருந்து உணர்த்தியுள்ளார். நான்கு தலைப்புகளில் கருத்துகள் ஆராயப்பட்டுள்ளன.
அடிமைப்பட்டு, உரிமை இழந்து வாழும் பெண்களுக்கு வழிப்புணர்வு ஏற்படுத்த, ‘பெண்ணியம்’ என்ற கோட்பாடு உருவானது. பெண்ணியத்தின் வகைகள் உள்ளிட்ட கருத்துக்கள் ஆராயப்பட்டுள்ளன.
பெண்களுக்கு பணி ஊதியம் குறைவு, வேலையிடத்தில் சந்திக்கும் பிரச்னைகள், பாதுகாப்பற்ற சூழல், அதிக நேர பணி போன்ற பிரச்னைகளையும், திலகவதி புதினங்கள் மூலம் காட்டியுள்ளார்.
திருமண வாழ்வில் ஏற்படும் சிக்கல்கள், ஆணாதிக்க பிரச்னை போன்றவற்றை விளக்கி தீர்வுகளையும் கூறியுள்ளார். பெண்ணியம் குறித்து அறியவும், ஆய்வு செய்யவும் துணை செய்யும் நூல்.
– முகில் குமரன்