சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த பல்வேறு துறை சாதனையாளர்கள், கொடையாளர்கள், கலைஞர்கள், சமூக சேவகர்கள், கண்டுபிடிப்பாளர்கள் குறித்த கட்டுரை தொகுப்பே இந்த நுால்.
அரசுப்பள்ளி அமைக்க விளைநிலத்தை அளித்தவர் துவங்கி, 10 ஆயிரம் சுகப்பிரசவம் பார்த்த மூதாட்டி, தனக்குத்தானே சிலை வைத்த விவசாயி, வானொலி நிலையம் அமைத்த செய்தியாளர் என பல தகவல்களை கொண்டுள்ளது, கழுதை பால் விற்கும் தம்பதி, 50 ஆண்டாக குதிரை வண்டியில் பயணிக்கும் முதியவர், மறுமணத்தை முன்னின்று நடத்தும் மலைவாழ் பழங்குடி மக்கள், பேட்டரி சைக்கிள் வடிவமைத்துள்ள இளைஞர், தேசிய அளவில் சாதனை புரிந்த விளையாட்டு வீரர் என பலரையும் அறியச் செய்துள்ளது இந்த நுால்.
– சையத் அலி