எகிப்திய தொன்மை பற்றிய ஆறு கதைகளை தேர்ந்தெடுத்து, சுவை குன்றாதவாறு தமிழில் தந்துள்ளது இந்த நுால். இவற்றில் ஆசிரிஸ், ஹோரஸ், ஹெலன், அமாஸிஸ் என்ற பாத்திரங்களை மையமிட்டு, கதைகள் பின்னப்பட்டு உள்ளன. ஆசிரிஸை அழகிய பேழை ஒன்றில் வைத்து நதியில் விடுவதில் துவங்குகிறது. அவன் மனைவி தேடிச் செல்கிறாள்; இறுதியில் கண்டுபிடிக்கிறாள். ஆசிரிஸ் ஆவியாக வந்து மனைவியுடன் உறவு கொள்ள கருவுறுகிறாள்.
எகிப்தியரின் நம்பிக்கை, கடவுளர்கள், பலி, சடங்குகளை அறிய உதவுகிறது. திரைப்படப் பாடல்களை ஆங்காங்கே தந்துள்ளது கதைகளுக்கு சுவையூட்டுகிறது. விறுவிறுப்பு குறையாத நுால்.
– ராம.குருநாதன்