சாயி பகவானை ஆராதிக்கும் பாமாலைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். மராத்தி மொழியில், கிருஷ்ணராவ் ஜாகேஸ்வர் பீஷ்மா இயற்றிய பாடல்கள், தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளது.
சாயிபாபா கோவில்களில் நான்கு நேரம் நடக்கும் ஆரத்திகளின் போது, இசைக்கும் பாடல்களின் தொகுப்பாக உள்ளது. முதல் பாடல், ககட ஆரத்தியில் துவங்குகிறது. ஒவ்வொரு பாடலும், மராத்தி மொழியில் குறிப்பிட்டு, அதன் தமிழ் பொருள் விளக்கமாக தரப்பட்டுள்ளது. ராகங்களை மையமாகக் கொண்டு பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன.
நுாலின் இறுதி பகுதியில், சாயிபாபாவின், 16 உபதேச மொழிகள் தரப்பட்டுள்ளன. சாயி பக்தர்கள் இசையுடன் பாடித் துதிக்க உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நுால்.
– ராம்