மனசாட்சியை நம்பினால் எண்ணங்கள், செயல்கள் உண்மையானதாக, பரிசுத்தமானதாக, நல்லிணக்க உணர்வுடன் அமைந்து பாவச் செயல்களை தவிர்க்கும் என்ற கருத்தை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
புற்றுநோய் வருவதற்கான காரணம், கையூட்டு பெற்ற பணமே என, ‘உள்ளுக்குள் உள் உள்ளேன்’ என்ற கதையில் கூறப்பட்டுள்ளது. அனைத்து உயிர்களையும் போற்ற வேண்டும் என்பதை மையப்படுத்திய, ‘பூனைத் தாய்’ என்ற கதை, டாக்டர் மு.வ., எழுதிய, ‘குறட்டை ஒலி’ கதையை நினைவூட்டுகிறது.
ஒவ்வொரு விசைக்கும் எதிர்விசை உண்டு என்ற நியூட்டனின் விதியை நினைவூட்டுகிறது ‘எதிர்விசை’ என்னும் கதை. வித்தியாசமான கதைகளால் ஆன அபூர்வ தொகுப்பு நுால்.
– புலவர் சு.மதியழகன்