திருத்தல வழிபாட்டு முறைகளைப் பொதுநல நோக்கில், 31 பிரிவுகளாக வழங்கும் நுால். வாழ்க்கையில் தரிசிக்க வேண்டிய திருத்தலங்கள் பற்றியும் சொல்கிறது. திருமணம், வேலை, வீடு, தொழில் சிறப்புடன், தடை இன்றி நடக்க தரிசிக்க வேண்டிய கோவில்களை வகைப்படுத்தி வழங்கி உள்ளது.
மயிலை கபாலீஸ்வரர் கோவிலின் முழு விபரங்களையும் சுருக்கமாக, அழகுடன் பதிவு செய்கிறது. தோஷம், நோய், நல்ல – கெட்ட சக்திகள், சாபம் போன்றவை நீங்க வழிபட வேண்டிய திருத்தலங்கள், விருட்சங்கள் தொடர்பான செய்திகளை பதிவு செய்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், ஹயக்ரீவர் கோவில் கல்வியில் சிறப்படைய வழிகாட்டும் சிறப்புடையது. பக்தர்களை அழைத்து அருள் தரும் சுந்தரராஜ பெருமாள் கோவில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது, நல்ல வாழ்க்கைத் துணையை தேட, மரகதாம்பிகை கோவில் என்பன போன்ற பதிவுகளைக் கொண்ட நுால்.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்