வினாயகர் அருள் இருப்பவருக்கு எல்லா இடங்களிலும் எப்போதும் முதலிடம் தான். தருமத்தை ஒரு நாளும் அளக்க முடியாது. எவன் ஒருவன் தன்னை அறிந்து கொள்ளவில்லையோ அவன் மனிதன் இல்லை; பார்க்கும் பார்வைகள் அனைத்துமே நம் குணத்தைப் பொறுத்தது தான்; ஒருவன் பிறந்த குலத்தையும், தோற்றத்தையும் கண்டு எடை போடக்கூடாது; ஞானத்தைக் கொண்டே மதிப்பிட வேண்டும் என்பது போன்ற அரிய தத்துவங்களை, எளிமையாக சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்ட, 63 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு நுால்.
சிறு வயதில் பெரியவர்கள் சொன்ன கதைகளையும், மற்றவர்களிடம் கேட்ட கதைகளையும், மேலும் அந்த கதாபாத்திரங்களை நம் கண் முன்னே நடந்தது, நடப்பது மாதிரியும் ஆசிரியர் வெங்கட்ரமணி தொகுத்து வழங்கி உள்ளார்.
இது, பல சுவாரசியமான புதிய விஷயங்களைக் கொண்ட சிறுகதைகள். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் படித்து மகிழலாம்.
– இளங்கோவன்