சாதனைகளால் மக்களின் மனதில் இடம் பிடித்த சேலம் மாவட்ட விந்தை மனிதர்களை அடையாளப்படுத்தும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். வாழப்பாடியில் பிறந்து, விடாமுயற்சியால் தலைமைச் செயலர் பதவி வரை உயர்ந்த க.சண்முகம், உயிர் பிழைக்க அறுவை சிகிச்சை செய்துகொண்டபோதும் மன உறுதியால் முயன்று, மராத்தான் வீரராக சாதித்த பாலமுரளி பற்றி விரிவாக தரப்பட்டுள்ளது.
குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிணக்கால் தனித்து வந்து, கண்ணாடி பாட்டில்கள் சேகரித்து வாழ்ந்து வரும் அத்தனுார்பட்டி நல்லதம்பி, திம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்த லாரி அதிபர் மாதேஸ்வரன் மவுனத் துறவியாக மாறியது பற்றிய கதைகள் உள்ளன.
சிங்கிபுரத்தைச் சேர்ந்த செல்வராஜ், தான் வளர்த்த ஆட்டுக்கிடாய்க்கு நினைவிடம் எழுப்பி, கால் நுாற்றாண்டுகளாக அஞ்சலி செலுத்தி வருவது, அயராத உழைப்பால் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்திய ஆசிரியர்கள் என, பலரது சாதனைகள் இடம் பெற்றுள்ள நுால்.
–
மேதகன்