வாழ்வில் சந்தித்த மனிதர்கள், கடந்து வந்த பாதையில் பெற்ற அனுபவங்களை உள்வாங்கி படைக்கப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். பெரும்பாலும் பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளன.
திருமணத்துக்கு பின் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள், எந்த வகை மாற்றம், பாதிப்பை ஏற்படுத்துகின்றன என சில கதைகள் தெளிவாக்குகின்றன. பாதிப்பு ஏற்படும் போது, பொங்கி எழுவதையும் சித்தரிக்கிறது. பெண்களின் ஆதங்கம், எழுச்சி, வருத்தம், முன்னேற்றம் என பல நிலைகளை மிக எளிமையாக சித்தரிக்கின்றன.
ஆண்களை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள சில கதைகள், பாசம், அன்புக்கு ஏங்கும் நிலையை வெளிப்படுத்துகின்றன. வாழ்வில் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களின் செயலை கண் முன் நிறுத்துகின்றன.
இளம் வயது பெண்களின் குதுாகலம், தெளிவு, துன்பங்களை துடைக்க மூத்தவரின் துணை தேடுதல் போன்ற மேன்மையான பண்பாட்டை மென்மையாக வெளிப்படுத்துகின்றன. எளிய மொழி நடையில், வாழ்வின் நிலைகளை பிரதிபலிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
– ராம்