சேலம், வாழப்பாடி வட்டாரத்தின் வரலாற்று சிறப்புகளை கூறும் நுால். மொத்தம், 45 தலைப்புகளில் விவரிக்கிறது. பழமையான தான்தோன்றீஸ்வரர் கோவில், பத்தாம் பத்திநாதர் கோவில், இஸ்லாமியர் பள்ளிவாசலின் பிரசித்தத்தை பேசுகிறது. பழநி கோவில் பஞ்சாமிர்தத்தில் கலந்திருக்கும் தேன்வாழை பற்றி கூறுகிறது.
வெற்றிலையின் மகத்துவத்தை பேசி, மணத்தை முகர்ந்து பார்க்க வைக்கிறது. குழந்தையாக இருந்தபோது விளையாட்டாக கட்டிய மாரியம்மன் கோவிலை, 50 ஆண்டுகள் கடந்தும் பொங்கலிட்டு வழிபடுவதை ஆச்சர்யத்துடன் விவரிக்கிறது. விதவை வழிபாட்டை கூறி விழிப்படையச் சொல்கிறது. வாழப்பாடி வரலாற்றை கூறும் நுால்.
–
டி.எஸ்.ராயன்