பரபரப்பை தரும் கிரைம் நாவல். அடுத்து என்ன நடக்கும், எப்படி நடக்கும் என்று படபடப்பை துாண்டுகிறது. கதையில் பிள்ளையை கொல்லாமலேயே வில்லன் சாதித்திருக்க வாய்ப்பு இருந்தும் ஏன் கொன்றார் என்பது தான் நெருடல். டைரி எழுதுவது ஒரு நல்ல பழக்கம் என்பதை கதையின் போக்கு காட்டுகிறது.
கிளைமாக்ஸ் சினிமா பட பாணியில் ஏரோடிராமில் நடப்பதை தத்துரூபமாக வர்ணித்து இருப்பது அபாரம்; கிரைம் நாவல் படிப்பவருக்கு மிகவும் பிடிக்கும்.