ஆறு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு நுால். அதில், ‘எச்சில் இலை’ என்ற சிறுகதை சொல்லும் கருத்து அற்புதம். எச்சில் இலையில் சாப்பிட மறுத்த காமுகன், அடுத்தவன் பொண்டாட்டியும் எச்சில் இலை தான் என்பதை சொல்லும் முறை, பெண் குலத்துக்கு பெருமை சேர்க்கிறது.
வாழ்க ஜனநாயகம் என்ற இன்னொரு கதையும் நல்ல முறையில் பின்னப்பட்டுள்ளது.
இன்றைய அரசியலைப் பற்றி தெளிவாகச் சொல்லுகிறது. நியாயத்துக்கு காலமில்லை என்பது தெரிந்த ஒன்று தான் என்றாலும், தன் கட்சி ஆளை விட்டு தனக்கு காவலுக்கு வந்த அதிகாரியை கல்லை விட்டு எறிந்து காயப்படுத்தி, கோபத்தால் எதிர்க்கட்சியினரை பந்தாடுவது இன்று நடக்கிறதோ என்று நினைக்க வைக்கிறது.
வித்தியாசமான கதை பின்னல்... முதியவர்கள் உலகம், கவலையை மறக்க ஒரு புதிய முயற்சி; வித்தியாசமான சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
–
சீத்தலைச் சாத்தன்