ஒவ்வொரு மாதிரியான கதைகளை கொண்ட தொகுப்பு நுால். எல்லாமே பயன்படக்கூடிய காய்கனி விதைகள் தான். சமூகத்துக்கு தேவையான கதைகள் தான். மனதில் தைக்கும் கதைகள் சில மயிலாக வருடுகின்றன. சில தென்றலாய் தீண்டுகின்றன. மொத்தத்தில் வாழ்வதற்கு தேவையான அன்பை ஜீரணிக்கும் அளவு திகட்ட திகட்ட தருகின்றன.
‘லிவ்விங் டு கெதர்’ காலமாற்றத்தை காட்டும் கதை. ‘கிரஷர் ஆப்பரேட்டர்’ கதையில், சந்தோஷம் என்பது வசதியைப் பொறுத்தது இல்லை; மனதைச் சார்ந்தது என்பதை மனதில் விதைக்கிறது. நெகிழ்ச்சியும், மகிழ்ச்சியும் தரும் சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
–
சீத்தலைச் சாத்தன்