உயிர் காப்பதில் முதன்மை பணியை செய்து வரும் ஆம்புலன்ஸ் சேவை பற்றிய விளக்கமான நுால். இந்த சேவையில் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வரும் டாக்டர் சாந்தகுமாரின் அனுபவம், பாடம் கற்பிக்கும் வகையில் அமைந்துள்ளது.
ஆபத்து காலத்தில் உதவும் வகையில் பணியாற்றும் ஆம்புலன்ஸ் சேவையை வரலாற்று ரீதியாக விளக்குகிறது. சேவையின் போது ஏற்படும் சிரமங்கள் மிகச் சிறப்பாக காட்டப்பட்டுள்ளன. சமூக அந்தஸ்துள்ளவர்களுக்கு உதவும் போது ஏற்படும் நெருக்கடி பற்றிய விபரமும் அனுபவப்பூர்வமாக தரப்பட்டுள்ளது.
விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் செயலாற்ற வேண்டிய விதம் குறித்து, முறையான அறிவுரைகள் தரப்பட்டுள்ளன. தகவல்கள் மிக எளிய நடையில், புரியும் வகையில் உள்ளன. தெளிவான விளக்கப் படங்களுடன், தரமான தாளில் அச்சிடப்பட்டுள்ளது. சேவைப் பணியில் இருப்போர் மட்டுமல்ல, சாதாரண மக்களும் அறிந்து கடைப்பிடிக்கத்தக்க நெறிகளை தெரிவிக்கும் நுால்.
–
ராம்