முகப்பு » கதைகள் » ஜோதிட மஞ்சரி

ஜோதிட மஞ்சரி

விலைரூ.200

ஆசிரியர் : ஆர்.அருள்நிதி கவிதாலட்சுமி

வெளியீடு: லட்சுமி கிருபா டிரேடர்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
ஜோதிடம் பற்றி, 56 தலைப்புகளில் தகவல்களை தரும் நுால். உதாரண ஜாதகம் ஒன்றுக்கு பலன்கள் குறிப்பிட்டு சொல்லப்பட்டுள்ளன. கட்டுரைகளுக்கு இடையே பொருத்தமான கதைகள் தரப்பட்டுள்ளன. கல்வி சிறக்க, வாணிபம் மேலிட, திட்டமிட்ட வாழ்வு வாழ, ஆற்றலுடன் செயல்பட, திறன்களுக்கு எத்தகைய ஜாதக அமைப்பை பெற்றிருக்க வேண்டும் என உதாரணத்துடன் விளக்குகிறது.

ஜோதிட விதிகளை நுணுக்கத்துடன் கூறுகிறது. சரியான விளக்கமும் தரப்பட்டுள்ளன. உண்மையான ஜாதகங்களை, பிறந்த தேதி, நேரத்துடன் கொடுத்து விதிகளை விளக்கி, பயன்கள் கூறப்பட்டுள்ளன.

கல்வி பெறுவதற்கும் அதனால் மேன்மை அடையவும் ஜாதகம் எப்படி அமைந்திருக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறது. ஜோதிடம் பயில்பவர்களுக்கு பயன் தரும் நுால்.

புலவர் இரா.நாராயணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us