ஊர்களின் பெயர்களை ஆய்வு செய்தால், புதுப்புது வரலாற்று உண்மைகள் புலனாகும் என்பதை உணர்த்தும் நுால். வடுகூர் எனும் தெலுங்கு பெயர், வடுகரின தெலுங்கு மக்களை குறிப்பதாகும். இந்த ஊரில் வந்து திருஞானசம்பந்தர் தமிழில் தேவாரம் பாடியது பற்றி ஆய்வு செய்கிறது. கள்வர், களப்பிரர் என குறிப்பிடப்படுவோர், வடுகரா என்றும் ஆராய்கிறது.
திருஞானசம்பந்தர் வருகைக்கு பின், தெலுங்கு பேசும் வடுகர் சைவ சமயத்திற்கு மாறியுள்ளனர் என்பது வரலாற்று உண்மை. இலக்கியத்தில் வடுகர், வடுகு பற்றி ஆராயப்பட்டுள்ளது. நற்றிணை, குறுந்தொகை, அகநானுாறு சங்கப் பாடல்கள், பிள்ளைத் தமிழ், திருப்புகழ் மேற்கோள்களால் கன்னட மொழி பேசுபவர் பற்றி கூறப்பட்டுள்ளது. வடுகர் குடியேற்றம், வாழ்க்கை முறை பற்றியும் எழுதப்பட்டுள்ளது. வடுகக் கூத்தை திருஞானசம்பந்தர் தேவாரத்தில் பாடுகிறார். வடுகூரை விரிவாக ஆராயும் நுால்.
–
முனைவர் மா.கி.ரமணன்