நீட் தேர்வில் வெற்றி பெற்றால் நல்ல மருத்துவராக முடியும் என்பது கேள்விக்குறி தான் என்று சொல்லும் நாவல். பகுதிகளாக பிரிக்காமல் ஒரே கதை ஓட்டமாக செல்கிறது. மல்லிகா மாதிரி மனிதநேயம் உள்ளவர்களை வாழ்க்கையில் சந்திக்க முடியுமா? என்ற கேள்வி எழுகிறது. சந்தித்தால் அவர் கொடுத்து வைத்தவர் தான்.
நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவ, மாணவியரை திருடனைப் போல் சோதிப்பது ஏன் என்று கேட்பது நியாயமானது. வெள்ளை ஆடை வெப்பத்தை வெளியேற்றும் சக்தி படைத்தது என்ற விஞ்ஞான உண்மையை வெளிப்படுத்துகிறது. கவாத்து செய்யப்பட்ட மா மரம், எப்படி தளிர் விடுமோ அப்படி மாணவர்களை ஒருமுகப்படுத்தினால் கல்வி சிறப்பாகும் என சொல்லும் நாவல்.
–
சீத்தலைச் சாத்தன்