வாழ்க்கை நிகழ்வுகளைக் கொண்டு கற்பனையாக உரைநடையில் எழுதப்பட்டுள்ள நுால். செய்யத்தகாத செயல், குற்றம், சிறுபாதகம், தீவினையாளன், உயிர் வதை செய்தலாகிய குற்றம், பழி பாவங்களுக்கு அஞ்சாதவன், கொலைப் பாதகம், துரோகம் செய்பவன், குற்றம் செய்தோர், ராஜ துரோகம், சுவாமி துரோகம், குருத்துரோகம், இனத்துரோகம் போன்றவை பற்றிய விபரங்கள் உள்ளன.
மனித மனம் கதையிலும், வரலாற்றிலும் ஆர்வம் காட்டக்கூடியதாக உள்ளது. உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக உள்ளது என்பதை காட்டுகிறது. ஆகாஷ், பிரபாவதி, நர்மதா, குமரேசன், கார்த்திகா, ராஜதுரை போன்ற கதாபாத்திரங்களைக் கொண்ட நாவல். இது 10 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு விறுவிறுப்பு குறையாமல் எழுதப்பட்டுள்ளது.
–
முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்