மூன்றாம் பாலினத்தவருக்கு ஏற்பட்டு வரும் பிரச்னைகளை முன்னிலைப்படுத்தி எழுதப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். அன்றாட வாழ்வு பிரச்னையை, நுட்பமான உரையாடல் வழியாக உணர்த்துகிறது.
தொகுப்பில், 12 சிறுகதைகள் உள்ளன. மூன்றாம் பாலினத்தவரை, ‘திருநர்’ என அறிமுகம் செய்து வலிகளை தெளிவாக, சிறிய கதைகள் வழியே தருகிறது. மலம் கழிப்பது கூட எத்தனை வேதனையானது என பதிவு செய்துள்ளது.
பொது சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு வரும் மூன்றாம் பாலினத்தவரை, கண்ணியமாக நடத்த வலியுறுத்தும் கதைகள் அடங்கிய தொகுப்பு நுால்.
–
மதி