நிகழ்காலத்தில் வாழப் பழகுவதற்கான அறிவுரையை தரும் நுால். நம்பிக்கை ஊட்டி முன்னேற்றப் பாதையில் நடத்தும் விதமாக எழுதப்பட்டுள்ளது. சிறிய கதைகள் மூலம் தெளிவை ஏற்படுத்துகிறது.
கடந்த காலத்தின் தன்மையை விளக்கி, நிகழ்காலத்தின் மகிமையை சொல்கிறது. எதிர்காலம் பற்றி கவலைப்படாமல் எதிர்கொள்ளும் மனப் பக்குவத்தை உருவாக்கும் வகையில் கருத்துக்களைக் கொண்டுள்ளது.
மனம், செயல், எண்ணம் எல்லாவற்றையும் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கி, உறுதியை தருகிறது. வாழ்வில் பிடிப்பையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும் நுால்.
–
மதி