குடும்ப வாழ்வியலை மையப்படுத்திய நாவல். வெண்ணிலா கதை நாயகியாக வந்து திருப்பங்கள் ஏற்படுத்துகிறார். குடும்ப உறவுகளின் சிக்கலை பேசுவதின் ஊடே, காதலையும் சேர்த்து சுவாரசியம் குறையாமல் நகர்கிறது. கூட்டு குடும்பத்தின் பாசம், கண்டிப்பு, மரியாதை, கைதுாக்கி விடுவது, கட்டுப்பாடு போன்ற குணாதிசயங்கள் ஒவ்வொரு பாகத்திலும் வெளிப்படுகின்றன.
பல ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய பொருட்களை வியந்து பார்ப்பது போல், எதிர்காலத்தில் கூட்டு குடும்ப வாழ்க்கை வியக்கும் அளவில் இருப்பதை உணர்த்துகிறது. காலமாற்றத்திற்கு ஏற்ப மாறிக் கொள்வதன் அவசியத்தையும் பேசுகிறது. எளிய நடையில், இதமான குரலில் பேசும் உணர்வை ஏற்படுத்துகிறது. கதை, நாவல் எழுத முயற்சிப்போருக்கு உதவும் நுால்.
–
டி.எஸ்.ராயன்