மர்ம முடிச்சுகளோடு நகரும் நவீனம். சிநேகிதம், ராணுவம், தேசபக்தி, காதல் என எல்லாம் சேர்ந்து பயணிக்கின்றன. தேசத்தை இழிவுபடுத்திய அயல்நாட்டுக்காரனை சுட்டுக்கொன்ற மாணவியர் இரண்டு பேரில் ஒருவர் தான் உண்மையான கொலையாளி. அதை ராணுவம் எப்படி கண்டுபிடிக்கிறது என பல்வேறு சூழ்நிலைகளில் நடக்கிறது கதை.
ராணுவம் என்றால் என்ன... அது வீரம் விளையும் பூமி. அங்கே உடல் புதைக்கப்படும். ஆனால் வீரம் விளைவிக்கப்படும். எந்த நாட்டு ராணுவம் என்றாலும் அது வீசும் குண்டுகளுக்கு உறவும், உணர்வும் கிடையாது. இது போன்ற வாசகங்கள் நிறைய உள்ளன. சொந்த தேசத்தின் பக்தி சொல்லும் நாவல்.
–
சீத்தலைச்சாத்தன்