குடும்ப சச்சரவுகள் மற்றும் அதன் தீர்வுகள் என்ற அடிப்படையில் எழுதப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். எந்த பிரச்சனை எந்த விதத்தில் வரும்; அதை எப்படி சமாளிக்கலாம் என கணித்து வழிகாட்டலையும், உரிய நம்பிக்கையையும் தருகிறது.
இன்பம் என்ற கதை, முழுக்க முழுக்க தண்ணீரின் அடிப்படை. கதையின் கருவே தண்ணீர் தான். அது எந்தெந்த விதத்தில் பயன்படுகிறது என்பதை விளக்கமாக எழுதப்பட்டுள்ளது.
ஆத்மார்த்தமான காதல் கதை ஒன்று. மனைவி சந்தேகப்பட்டாலும் தான் நேசித்த பெண்ணை மறக்காத முதியவரையும், மனைவியை சந்தேகிக்காத பெண்ணின் கணவனையும் பற்றிய கதை. சுவாரசியமான கதைகளின் தொகுப்பு நுால்.
–
சீத்தலைச் சாத்தன்