அன்னையின் தியாகங்களையும், போராட்டங்களையும் எடுத்துரைக்கும் நாவல். வறுமையின் பிடியிலிருந்து விடுபட, பெண் என்ன செய்தாள் என்பதை விளக்குகிறது.
இளமைப் பருவம் முதல் வாலிபப் பருவம் அடைந்து மணம் புரிந்து வாழ்வது வரையிலான கதை சுவைபட, நினைவோட்டங்களின் நீரோட்டமாய் அமைந்துள்ளது. வறுமையை விட சிறந்த பள்ளி இல்லை என கண்ணதாசன் கூறுகிறார். அத்தகைய வறுமை பிடியிலும் ஒரு கதாபாத்திரம், சில சமயம் மகிழ்ந்ததையும், வறுமை நீங்க முக்கிய கருவியாக, கல்வி பயன்பட்டதையும் படம் பிடித்துள்ளது.
தாயின் உழைப்பு, கல்வியின் மேன்மை, வறுமையின் கொடுமை, துாக்கிவிட்டு மகிழ்ந்தவர்கள், காதலின் பாதை என இயல்பான மற்றும் போராட்ட வாழ்வை அழகுற சித்தரிக்கிறது. அன்னையை நினைவூட்டும் அற்புதப் படைப்பு.
–
முனைவர் இரா.பன்னிருகை வடிவேலன்