ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒரே நீதி என்னும் கூற்றை உறுதிப்படுத்தும் பாத்திரப் படைப்பு பாஞ்சாலி என்பதை குறிப்பிடும் நுால். வியாச பாரதத்தைத் தழுவி, பாஞ்சாலி சபதத்தை பாரதியார் படைத்ததாகக் கூறப்பட்டுள்ளது. அதில் இடம் பெறும் சூதுப்போர்ச் சருக்கத்தையே பாஞ்சாலி சபதமாகப் படைத்துள்ளார் பாரதி.
மகாபாரதக் கதையில் ஆறு முக்கிய பெண் பாத்திரங்கள் சத்தியவதி, காந்தாரி, குந்தி, திரவுபதி, சுபத்திரை, உத்தரையை சிறப்பாக பதிவு செய்துள்ளது. நெருப்பில் தோன்றியவள், அக்கினி குண்டம் பிறப்பிடம் என்று பெண்மை சிறப்பை உணர்த்துகிறது. எளிய சொற்றொடரில் பாஞ்சாலியின் முழு கதையைத் தொகுத்துள்ளது. இக்காலச் சூழலுக்கு ஏற்ற நுால்.
–
முனைவர் இரா.பன்னிருகை வடிவேலன்