திருமண பந்தத்தில் இணைய, இலங்கையில் இருந்து கனடா செல்லும் பெண்ணின் வாழ்க்கை மாற்றத்தை கூறும் நாவல். அமலா என்ற கதாபாத்திரத்தை சுற்றி கதை நகர்கிறது. பெற்றோரை கனடா கூட்டி செல்ல முடியாத ஏக்கத்தை பகிர வைக்கிறது. வைராக்கியத்துடன் வேலைக்கு சேர்ந்தபின், பெற்றோர் கனவை நனவாக்கினாளா என்பதை பேசுகிறது.
நாடு கடந்து செல்லும் போது ஏற்படும் ஏக்கத்தை உணர்த்துகிறது. பேச, ஊக்கமளிக்க சினேகிதிகள் கிடைத்தால் ஏற்படுத்தும் உற்சாகத்தை காட்டுகிறது. நாவல் ஓட்டத்தில், ஆன்மிகம் நாயகிக்கு நம்பிக்கை ஊட்டுகிறது. கருப்பொருள், எளிய எழுத்து நடை வாசிப்பை சுவாரசியம் குறையாமல் கொண்டு செல்கிறது. கதை, நாவல் எழுத துடிப்போருக்கு உதவும் நுால்.
–
டி.எஸ்.ராயன்