தமிழ் இலக்கணத்திற்கு ஏற்ப கற்பனயாக ஒரு கதையை உருவாக்கி புதினமாக புனையப்பட்ட நுால். தலைவன், தலைவி கதை மாந்தர்களுக்கான களவொழுக்கம், கற்பொழுக்கம், மண முடித்தல், ஓதல் பிரிவு, பொருள்வயிற் பிரிவு, துாது, போர் பிரிவு, பரத்தையர் பிரிவு போன்றவை சுட்டப்பட்டு உள்ளன.
இந்த இலக்கணங்களுக்குப் பொருத்தமாக மதுரையைக் கதைக்களமாகக் கொண்டு தீர்த்தன் என்னும் வணிகன் மகன் சாத்தப்பன் – வசந்தசேனா தலைவன், தலைவியாகக் காட்டப்பட்டுள்ளனர்.
அவர்களின் காதல் ஒழுக்கம், இல்லற மாண்பு, பொருள்வயிற் பிரிவு, ஒரு தலைக் காதல் என கதைக்களம் விரிகிறது. திருக்குறள் இன்பத்துப்பால் குறட்பாக்கள், அகப்பொருளில் பாடப் பெற்ற சங்க இலக்கியவரிகள் கதையின் இடை இடையே எடுத்தாளப்பட்டு உள்ளன. சங்க இலக்கியக் காதல் நெறிகளை உணர்த்தும் நுால்.
–
புலவர் சு.மதியழகன்