மரணத்திற்கு பின் என்ன நடக்கும் என்பது புதிராகவே உள்ளது. அதற்கான உச்சகட்ட ஆன்மிக தேடலாக இப்புத்தகம் அமைந்து உள்ளது. நுாலாசிரியரின் எழுத்து புத்தகத்தை ஒரே மூச்சில் படிக்கும் ஆர்வத்தை துாண்டுகிறது.
சரித்திரம், கதைகள், வாழ்வியல், தத்துவம் என பல்வேறு விஷயங்களை படிக்கும் புத்தகப் பிரியர்களுக்கு, ‘ஒரு முடிவின் ஆரம்பம், உள்ளொளி பயணம், சொர்க்கமும், நரகமும் துவங்கி, என் கதை முடியும் நேரம்’ வரை ஒன்பது தலைப்புகளில் எழுதப்பட்டுள்ள அத்தனை விஷயங்களும் வித்தியாசமானவை.
அடுத்து என்ன நடக்குமோ என்ற திக்... திக்... தகவல்களுடன் ஆசிரியரின் இஷ்ட தெய்வமான மீனாட்சி பேசிக்கொண்டே பயணிக்க வைத்திருக்கிறார். மரணத்தை விட வலியது அன்பு தான் என உணர்த்தியுள்ள நுால்.
–
வியாஸ்