சாதுார்யம், நகைச்சுவை, தந்திரம், வேடிக்கை, கிண்டல் போன்றவற்றை மையமாக கொண்டு படைக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். மொத்தம், 70 தலைப்புகளில் அமைந்துள்ளன.
சிறு சிறு சம்பவங்கள் சுவைபட சொல்லப்பட்டு உள்ளன. பெரும்பாலும் அரசு அவை சார்ந்து, கேள்விகளுக்கு பதில் தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. தொன்று தொட்டு வழங்கப்பட்டு வந்த கதைகள் மிக நேர்த்தியாக தொகுக்கப்பட்டுள்ளன.
மன்னர், மந்திரிகளின் செயல்பாடுகள், சம்பவங்கள் சார்ந்து நகைச்சுவை ததும்ப விவரிக்கப்பட்டுள்ளது. சமயோசிதம், அறிவுக் கூர்மை, நம்பிக்கையை வளர்க்கும் வகையில் அமைந்துள்ளன. சிறுவர்களுக்கு நீதி போதனை செய்ய உதவும் நுால்.
–
ஒளி