தண்டியலங்காரம் கூறும், 35 அணிகளுக்கும் எடுத்துக்காட்டாக உள்ள திரை இசை பாடல்கள் பற்றி எழுதப்பட்டுள்ள நுால். சினிமாவில், ‘வசந்த கால நதிகளிலே வைரமணி நீர் அலைகள்’ என்ற பாடலில் அந்தாதித் தொடை அமைந்திருப்பதையும், ‘இந்தியாவின் தந்தை என்று காந்தி இருந்தார்; அவர் இடையினிலே ஏழையைப் போல் கந்தை அணிந்தார்’ என்ற பாடலில் பயனுவமை அணியும் உள்ளதை சுட்டிக்காட்டுகிறது.
‘என் வீட்டு கன்றுக் குட்டி என்னோட மல்லுக்கட்டி என் மார்பில் முட்டுதடி கண்மணி’ என்ற பாடலில், உருவக அணி அமைந்திருக்கும் பாங்கையும் விரித்துரைக்கிறது. திரையிசைப் பாடல்களில் உள்ள அணிநயங்களையும், கற்பனை திறனையும் பறைசாற்றுகிறது. படித்து இன்புறத்தக்க நுால்.
–
புலவர் சு.மதியழகன்