பரதக் கலையின் புகழ் பாடும் நாவல் வடிவிலான நுால். புகழ்பெற்ற பரதநாட்டியக் கலைஞரின் மகள், தஞ்சையில் புகழ் வாய்ந்த நாட்டியாலயா பள்ளியை துவங்குகிறார். பரத கலையையும், பண்பாட்டையும் பாரெங்கும் பரப்புகிறார். சூழ்நிலையால் செல்வந்தருக்கு மனைவியாகி, கலையை மறக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்.
தொழிலையும், வணிகத்தையும் நிர்வகித்த மகனை ஆடல் கலையில் ஈடுபடுத்தி ஆறுதலை பெறுகிறார். மீண்டும் நாட்டியாலயா பள்ளியைத் திறந்து, முன் போல் பரத கலையை பயிற்றுவித்து, ஆடல் கலையை அழியாமல் காக்க வேண்டும் என்ற எண்ணம் ஆழ்மனதில் அப்பிக் கிடந்தது.
அந்த கனவு நிறைவேறியதா; பாரம்பரிய பெருமைகள் காக்கப்பட்டதா? என்பது தான் கதை. கலைஞர்களின் மென்மையான உணர்வுகளும், சுயமரியாதையை இழக்காத நிலையும் விவரிக்கப் பட்டுள்ளன. பரத கலையின் பெருமையை உணர்த்தும் புதினம்.
–
புலவர் சு.மதியழகன்