இயற்கை வளம், குடும்ப உறவு, சமூக நிகழ்வுகளின் கவிதை தொகுப்பு நுால். ஒவ்வொரு கவிதையும் மனதில் அசை போட்ட ஆண்டு, தேதி, நாள், நிமிடம் வரை குறிப்பிடப்பட்டு உள்ளது. பொய், மெய் என இரு வேறு உலக குணங்கள்; வாழ்க்கை இலக்கு மரணத்தை நோக்கியது என கூறுகிறது. ஜோதிடம் சொல்லும் பறவை, எதிர்காலம் தெரியாமல் தவிப்பதை கூக்குரலிடுகிறது.
மேடையில் இல்லாவிட்டாலும், மனதில் மறைந்திருக்கும் ஜாதியை ரகசியமாய் சாடுகிறது.
வாழைப்பழத்தை கூவி விற்றால் ஏற்படும் உச்சரிப்பு சுவாரசியம் கொடுக்கிறது. நான்கு உடன் பிறந்தவர்கள் இருந்தால், கட்சி துவங்கி ராஜாவாகலாம் என வாரிசு அரசியலை சாடுகிறது. குழந்தை மொழியை பேரன் வழியில் பேசி பாசத்தை பொழிகிறது. யாருக்காகவும், யாரைக் கேட்டும் பூப்பதில்லை பூக்கள்; அதுபோல், சுய புத்தியுடன் செயல்பட அறிவுறுத்துகிறது. கவிதை எழுத முயற்சிப்போருக்கு உதவும் நுால்.
–
டி.எஸ்.ராயன்