பண்டைய கலிங்க நாட்டு களத்தில் உருவாக்கப்பட்ட வரலாற்று நாவல் நுால்.
இமயவர்மன் குடிமரபு உறவுகள் பற்றிய தகவல்களோடு, அண்டை நாட்டுச் சமகால மன்னர்களின் மரபுவழி உறவுகள் பற்றியும் தெளிவாக முன்வைத்திருப்பது வரவேற்புக்குரியது.
கலிங்க நாட்டு நிலவியலை விளக்கியபடியே அண்டை நாட்டு அமைப்புகளை தந்திருப்பது நல்ல உத்தி.
அரச குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்கள், இமயவர்மனின் நகர்வலம், குடிமக்களுடனான நாட்டு வளம் பற்றிய எண்ணப் பகிர்வுகள், தம்பி கலிங்கனின் சூழ்ச்சிகள், பெண்ணாசையால் வரும் பகைமைகள், உட்பகையால் ஏற்படும் இடையூறுகள், தந்திரங்கள், சதிகள் போன்றவை வரலாற்றுக் காலத்தை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு