உடல், மனம், அறிவு மூன்றையும் வலிவும் பொலிவும் உள்ளதாக்கும் யோகாசனம் பற்றி விளக்கும் நுால்.
யோக வழிமுறைகள், யோகாசனங்கள், பிராணாயாமம், தியானம், மூச்சுப் பயிற்சி, எளிய தியான முறைகள், கிரியைகள், பந்தங்கள், முத்திரைகள், உணவு முறைகள், ஐம்பெரும் உடல்கள் பற்றி கேள்வி – பதில்களாக விளக்கப்பட்டுள்ளது.
தியானம் செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றங்களை தெளிவாகப் புரிய வைக்கிறது. ஆசனங்கள் செய்யும் முறைகளையும், பயன்களையும், உடல் உறுப்பு நிலைகளையும் படங்களோடு காட்டியுள்ளது. மூச்சுப் பயிற்சி, தியான முறைகள், பந்தங்கள், முத்திரைகள், ஹடயோகம் ஆகியவற்றையும் படங்கள் வழியாக விளக்கியுள்ளது. நலமுடன் வாழ வேண்டுமானால் நாளும் யோகா செய்ய வேண்டும் என வழிகாட்டும் நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்