ஐரோப்பிய நாடுகளில் பயணம் செய்த அனுபவத்தை எளிய நடையில் விவரிக்கும் நுால். அந்தந்த பகுதிகளில் வளர்ச்சியை தெளிவாக விவரிக்கிறது.
ஐரோப்பாவில் இத்தாலி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து நாடுகளில் கண்டவற்றை ஆர்வம் ஊட்டும் வகையில் காட்சிப்படுத்துகிறது. விமானம், பஸ், ரயில், மெட்ரோ என பயண சிறப்புகளை விவரிக்கிறது. நாடுகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி மற்றும் வனப்பை விவரிக்கிறது.
அந்தந்த நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் சுகாதார நடைமுறையை எடுத்துரைக்கிறது. மக்களின் வாழ்க்கை முறையை படம் பிடிக்கிறது. உணவு முறைகளை அறியத் தருகிறது. பொருளாதார வேறுபாடுகளைசுட்டிக்காட்டுகிறது. ஐரோப்பிய நாடுகளில் பொதுவாக ஏற்பட்டுள்ள வளர்ச்சியை படம் பிடித்து காட்டும் பயண நுால்.
– ஒளி