படையல், தி.நகர், சென்னை-600 017. (பக்கம்: 399.)
ஆசிரியரது முனைவர்பட்ட ஆய்வேடு இந்நூல். இவ்ஆய்வேடு 12 இயல்களைக் கொண்டது. அழகர் கோவில் அமைப்பு, கோவிலின் தோற்றம், இலக்கியங்களில் அழகர் கோயில், ஆண்டாளும் சமயத்தாரும், கோவிலும் சமூகத் தொடர்பும், திருவிழாக்கள், சித்திரைத் திருவிழாவும் மரபுக் கவிதையும், வர்ணிப்புப் பாடல்கள், நாட்டுப்புறக் கூறுகள், கோயிற் பணியாளர்கள், பதினெட்டாம்படிக் கருப்புசாமி, முடிவுரை என இவ்ஆய்வேடு நிறைவுருகிறது.
30 புகைப்படங்கள், இலக்கிய மேற்கோள்கள், கல்வெட்டுச் செய்திகள், இது நாள் வரை அச்சிடப்படாத அழகர் வர்ணிப்பு, பட்டயங்கள், நாட்டுப் புறப் பாடல்கள், புராண வரலாறு என பல செய்திகளை நன்கு ஆய்வு செய்து, திறம்பட நிறைவாய்ப் பதிவு செய்திருப்பது ஆசிரியரது ஆழ்ந்த புலமைக்கு எடுத்துக்காட்டு. ஆன்மிகப் பார்வைக்கும் அப்பாலே அன்றைய நாள் சமூகக் களத்தின் வெளிப்பாடுகளை இந்நூல் வழி பதிவு செய்துள்ளார் ஆசிரியர். தமிழில் இதுபோன்ற பழமையை புதுமை வழி சிந்தனையோடு வெளிக்கொணர வேண்டிய பதிவுகள் நிறைய வருதல் வேண்டும்.