தனம் பதிப்பகம், ஓ1, லாயிட்ஸ் குடியிருப்பு, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 170.)
இது ஒரு பல்சுவைக் கட்டுரை நூல். தமிழ், தமிழர்கள் தமிழகத்தின் முன்னேற்றம், புதிய சிந்தனை என்ற தலைப்புகளில் பல கட்டுரைகள் அருமையாக உள்ளன. திருக்குறள், பாரதியார் பற்றிய கட்டுரைகள், ஆசிரியர் சந்தித்த பல தலைவர்களுடைய வாழ்க்கைக் குறிப்புகள், பல கோவில்கள் பற்றிய குறிப்புகள், தமிழ் மொழி, இலக்கியம், ஆன்மிகம், வாழ்க்கை வரலாறு போன்ற பல துறைகளைச் சார்ந்த கட்டுரைகள் அடங்கிய நூல் இது. அனைவரும் படித்து இன்புறலாம்.