மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை- 108. (பக்கம்: 224.)
நூற்றுக்கணக்கான தலைப்புகளில் எழுதப்பட்டுள்ள கவிதைகளின் தொகுதி நூல் தான் இது. ஒரு வித்தியாசம் என்னவெனில், பாடுபொருள், சமூகநோக்கு எல்லாம் வழக்கம் போன்றே அமைந்திருந்தாலும், ஓர் உத்திச் சிறப்பாக அனைத்து கவிதைகளையும் நாட்டுப்புறப் பாடல் வடிவில் எழுதியுள்ளார்.
"எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவியமொன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகின்றான்' என்னும் மகாகவி பாரதியின் கட்டளைப்படி வேணுகோபாலன் தமது கவிதைகளை நாட்டுப்புறப் பாடல் வடிவில் எழுதியுள்ளது தனிச்சிறப்பு எனலாம்.
தஞ்சை மண்ணுக்குச் சொந்தக்காரரான இவர், பர்மாவில் பிறந்து வளர்ந்து புலம் பெயர்ந்த தமிழராகத் தாய் மண்ணுக்கு வந்து சேர்ந்த அனுபவங்கள் இவரின் படைப்புகளுக்குப் பலம் சேர்க்கின்றன.