கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு, தியாகராய நகர், சென்னை - 17. (பக்கம்: 168.)
மனிதனின் மூலாதாரத்தில் மூன்று சுற்றுகளாக சுருண்டு படுத்துறங்குகின்ற சக்தியே குண்டலினி. இதனை எழுப்ப உதவும் யோக முறையை மிக எளிமையாக, படங்களோடு தந்துள்ளார் நூலாசிரியர்.
""ஒரு பொருளை முழுவதும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற உறுதியில், ஆன் மாவை கெட்டியாகப் பிடித்துக் கொள்வது தியானம்.'' (பக். 52) ""மனித உடலில் 72,000 நாடிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.'' (பக்.63) ""குண்டலினி சக்தியை எவன் அறிகிறானோ அவனே யோகி. மூலாதாரக் குண்டலினியை விழிப்படையச் செய்வதையே, "விழித்திரு' என்கிறார் வள்ளலார். (பக்.127) ""தியானம், யோகம் போன்றவற்றைப் பயின்று பின்பற்றி வாழ்க்கைத் தத்துவத்தை உணர்ந்து பற்றினைத் துறந்தால், இறைநிலை அடைவது உறுதி'' (பக்.161) போன்ற பல அரிய செய்திகளை ஆய்ந்து பதிவு செய்துள்ள நூல். படிக்க வேண்டிய நூல்.