நற்றமிழ் பதிப்பகம், எம்.55/12, எம்.ஐ.ஜி., அடுக்ககம், முதல் நிழற்சாலை விரிவாக்கம், இந்திரா நகர், அடையாறு, சென்னை-20. (பக்கம்: 600) நூலின் தலைப்பில் உள்ள ஆனந்தரங்கப்பிள்ளை வி-நாட்குறிப்பு என்பதற்கு ஆனந்தரங்கப் பிள்ளையின் விரிவான நாட்குறிப்பு என்று முன்னுரையில் நூலாசிரியர் குறிப்பட்டுள்ளார். பாரிசில் தேசிய நூலகத்தில் உள்ள ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்பை வாசித்துப் பல புதிய தெரி வுகளை இந்நூலில் ஆசிரியர் விளக்கியுள்ளார்.
கடந்த 1709 முதல் 1761 வரை புதுச்சேரி யில் வாழ்ந்த ஆனந்தரங்கப் பிள்ளையின் உருவப் படத்தையும் இந்நூலில் வழங்கியுள்ளார். மேலும் பாரிசில் உள்ள ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்பின் ஒரு பக்கத்தை அப்படியே ஒளிப்படமாக இந்த நூலில் வெளியிட்டுள்ளதும் சிறப்பு ஆகும்.
24.4.1752 முதல் 08.04.1753 வரை உள்ள ஓராண்டுக்குரிய நாட்குறிப்பு மட்டும் இந்த நூலில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. பின்னிணைப்பாக நாட்குறிப்பில் இடம் பெறும் பெயர்களைத் தொகுத்து அவற்றின் பக்கங்களையும் குறிப்பட்டிருப்பது ஆய்வாளர்களுக்கு பேருதவியாக இருக்கும்.
1752 முதல் 1753 வரை தமிழகத்திலும் புதுவையிலும் நிகழ்ந்த நிகழ்வுகளை ஆராய நினைக்கும் வரலாற்று ஆய்வாளர்களுக்கும் பிற ஆய்வாளர்களுக்கும் இந்த நூல் உதவியாக இருக்கும். நூலாசிரி யர், பொறியியல் துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும் வரலாற்று ஆய்வில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் சிறந்த முறையில் நூலைப் பதிப்பித்திருக்கிறார்.
நூலாசிரியர் இந்த நூலுக்கு வழங்கியுள்ள விரிவான முன்னுரை அவரது உண்மை அறிந்து பதிப்பிக்கும் தன்மைக்குச் சான்றாக அமைகிறது.