முகப்பு » இலக்கியம் » அகநானூறு (களிற்றியானை

அகநானூறு (களிற்றியானை நிரை) முதல் பகுதி

ஆசிரியர் : கவிஞர் நா.மீனவன்

வெளியீடு: கோவிலூர் மடாலயம்

பகுதி: இலக்கியம்

Rating

பிடித்தவை
அகநானூறு (மணிமிடைபவளம்) இரண்டாம் பகுதி; அகநானூறு (நித்திலக்கோவை) மூன்றாம் பகுதி

(முதல் தொகுதி: பக்கம்: 288. இரண்டாம் தொகுதி: பக்கம்: 432. மூன்றாம் தொகுதி: பக்கம்: 256. உரையாசிரியர்கள்: கவிஞர் நா.மீனவன், தெ.முருகசாமி. முனைவர் சுப. அண்ணாமலை, வெளியீடு: கோவிலூர் மடாலயம், கோவிலூர்-630 307.

`நெடுந்தொகை' எனப்படும் `அகநானூறு' மூன்று தொகுதிகளாகத் தொகுக் கப்பட்ட நெடும் பாடல்களைக் கொண் டது. காதல் பற்றிய நானூறு அகப்பாடல் கொண்ட இத்தொகுதியை தொகுத்தவர் உப்பூரிக்குடி கிழார் மகன் உருத்திரசன்மர். இது 13 அடிச் சிற்றெல்லையும் 31 அடி பேரெல்லையும் கொண்ட பாடல்கள் அடங்கியது. முதல் 120 பாடல்கள் `களிற்றியானை நிரை' எனப்படும். ஒற்றைப்படை வருவன பாலைப்பாடல்கள், இரண்டும், எட்டுமான எண்ணுள்ளவை குறிஞ்சி; நான்கும் பதினான்குமானவை முல்லை; ஆறு, பதினாறு என வருபவை மருதம், பத்தும் இருபதுமானவை நெய்தல் பாடல்கள்.

பழந்தமிழர் சமூகவாழ்வியலை, இல்லறத்தை, செம்மாந்த நெறியினை மிக எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் திருக்கோவிலூர்த் திருமடம் `மக்கள் பதிப்பாக இதை கொண்டு கூட்டி, தெளிவுரையுடன், அருஞ்சொற்பொருள் தந்து, சிறப்புக் குறிப்புகளையும் தந்துள்ளது பயில்வோருக்கு பயனுள்ளது. பாராட்டப்பட வேண்டிய அருந்தமிழ்ப் பணி. நன்மக்கட்பேறு வாய்க்கப் பெறும் சிறப்பை 66ஆம் பாடலிலும், முருகன் பிறந்த கார்த்திகை நாளின் சிறப்பை 11ஆம் பாடலிலும், அக்காலத்தே நடந்த `தேர்தல் முறையை' உவமையால் விளக்கும் 77ஆம் பாடலிலும் உரையாசிரியர்களின் திறன் அருமை. இரு பெயரொட்டான `களிற்றியானை நிரை' என்ற தொடர். யானைக் கூட்டம் ஒருத்தல் என்ற ஆண் யானை முன் செல்ல பிடியும் கன்றுகளும் பிற குடும்பங்களுமாக வரிசையாகச் செல்லும் அழகினை க்குறிக்கும் வகையில் பெயரிடப்பட்டிருக்கலாம் என்பது சான்றோர் கருத்து.

அகநானூற்றின் செய்யுளும் பொருளும் ஒவ்வாமையான் `மணிமிடை பவளம்' என்று அழைக்கப்படும் இரண்டாம் பகுதியில், மருதன் இளநாகனார் பாடிய பாடல் எண்.121 முதல் உலோச்சனார் பாடிய பாடல் எண்.300 முடிய 81 புலவர்கள் பாடிய 180 பாடல்களுக்கு, கொண்டு கூட்டு, தெளிவுரை, துறை விளக்கம், அருஞ்சொற்பொருள், சிறப்பு விளக்கம் என்னும் வகையில் பதிப்பு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. பின்னிணைப்பில் பாட்டு முதற்குறிப்பு அகர நிரல், ஆசிரியர் பெயர், சிறப்புப் பெயர், பொருள் அகர நிரல் மூன்று இடம் பெற்றுள்ளது நேர்த்தியாக உள்ளது.

`இலைகளின்றி பூக்கள் மட்டுமே மலர்ந்து மலை மீது காணப்படும் இலவ மரங்கள் கார்த்திகை விளக்குகள் மலை மீது ஏற்றப்படுவதைப் போல' (பாடல் 185) கற்பனை நயமிக்க பாடல்கள் ஏராளம்.

`நெடுஞ்தொகை' எனப்படும் அகநானூற்றின், `செய்யுளும் பொருளும் ஒக்கும் ஆகலான் நித்திலக் கோவை' என்று அழைக்கப்படும் மூன்றாம் (இறுதி) பகுதியில், 55 புலவர்கள் பாடிய 100 பாடல்கள் (பாடல் எண்.301 முதல் 400 முடிய) கோவிலூர் ஆதீனப் பதிப்பு நெறிகள் முறையில், ஒவ்வொரு பக்கத் தலைப்பிலும் நூற்பெயருடன் பாடல் எண், ஆசிரியர் பெயர், தெய்வப் பெயர், திணைப் பெயர், பாடப் பெற்றோர் போன்ற குறிப்புகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

பாடலின் கட்டமைப்பு நன்கு புலப்படுமளவு சொற்பிரித்து உருவாக்கப்பட்டுள்ள இச்சங்க இலக்கிய நூல் மனித வாழ்வு ஒன்றையே மையமிட்டு எழுதப்பட்ட பழங்காலச் சொத்து.

கடந்த 200 ஆண்டுகளாக, நகரத்தார்களே தலைமை ஏற்று நடந்து வரும் கோவிலூர்த் திருமடம் வேத ஆகமத்தைத் தமிழில் சொல்லித் தரும் பெருமை பெற்றது. ஏற்கனவே, `திருமந்திரம்' செவ்விய பதிப்பாக வெளியிட்ட இத்திருமடம் சங்க இலக்கி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us