தி அவென்யூ பிரஸ், புது எண்.9, பழைய எண்.25, டி சில்வா ரோடு, மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்: 388.)
காட்டில் வழிப்பறிக் கொள்ளைக்காரன் நந்தன். தில்லையைக் கொள்ளையடித்துச் சூறையாட வந்த துருக்கியர்களிடம் இருந்து தில்லை நடராஜப் பெருமானை தில்லைவாழ் தீட்சிதர்கள் அனுமதியுடன் எப்படி இந்தக் கொள்ளைக்கார நந்தன் தந்திரமாகத் தூக்கிச் சென்று எங்கோ மலை நாட்டில் பத்திரமாக வைத்திருந்து மீண்டும் ஆபத்து நிங்கிய பிறகு தில்லைக்கே கொண்டு வருகிறான் என்பதை படு விஸ்தாரமாக விவரிக்கிறார் ஆசிரியர். ஒரே விஷயத்தைப் பற்பல வாக்கியங்களில் கூறியிருப்பது ஸ்பீடு பிரேக்கர்கள் போல நாவலின் வேகத்துக்கு தடை போடுகிறது. சிதம்பரம் கோவில் பற்றிய விவரங்கள், பூஜை செய்யும் தீட்சிதர்கள் பின்பற்றும் நடைமுறை, ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் அடியில் வைக்கப்படும் செம்புத் தகடு போன்ற பல விஷயங்கள் மிக சுவாரசியமாக விவரிக்கப்பட்டுள்ளன.