சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர்., நகர், சென்னை -78. (பக்கம்: 336.)
""தவித்து வருவோருக்கு தண்ணிதானே கொடுக்க வேணும், பசித்து வருவோற்கு அன்னம் கொடுக்க வேணும்'' என்னும் உபசார வார்த்தைகளைப் பேசும் முதுவன் பழங்குடியினரைப் பற்றிய ஆய்வு நூலிது. தமிழும் மலையாளமும் பேசுவதுடன் தங்களுக்குள்ளேயே ஒரு தனிப்பட்ட மொழியைப் பேசும் இம்மக்கள் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் பகுதியில் அதிகம் வாழ்கின்றனர்.
முதுவன் பழங்குடியினரின் குடும்ப அமைப்பு, நீதிமுறை, அரசியலமைப்பு, அவர்களுடைய சடங்குகள், விழாக்கள், பல்வேறு நம்பிக்கைகள், உணவுமுறை, பண்பாட்டுச் செய்திகள் எனப் பலவற்றையும் ஆய்வுசெய்துள்ள நூலாசிரியர் அவர்களின் வாழ்வியல் பிரதிபலிப்பாக உள்ள தாலாட்டு, ஒப்பாரி, காதல், பக்தி தொடர்பான பாடல்களையும் தொகுத்துத் தந்துள்ளது நாட்டார் வழக்காற்றியல் துறையில் ஆய்வு செய்பவர்களுக்குப் பெரிதும் பயன்படும்.