தமிழாக்கம்: வி.ராதா கிருஷ்ணன். வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-600 098. (பக்கம்: 438.)
இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டு லண்டனில் பிறந்து வளர்ந்தவர் ரஜனி பாமி தத் எனும் பொதுவுடைமையாளர்.
இந்தியாவின் ஒற்றுமையைப் பெரிதும் விரும்பிய இவர், லண்டனில் இருந்தபடியே அதை வலியுறுத்தித் தமது "லேபர் இந்தியா' என்ற இதழில் தொடர்ந்து எழுதியுள்ளார். இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிந்ததை வன்மையாக எதிர்த்துள்ளார். நவீன இந்தியா, இன்றைய இந்தியா என்று அவர் ஆங்கிலத்தில் எழுதிய நூல்கள் இந்தியாவில் பலராலும் விரும்பிப் படிக்கப்பட்டவை.
இந்திய விடுதலைக்கு இந்தியாவிற்கு வெளியிலிருந்தும் பலர் உழைத்திருக்கின்றனர் என்ற உண்மையை ரஜனி பாமி தத்தின் வாழ்க்கை வரலாற்றை படிப்பவர்கள் உணர முடியும்.
நேரு, போஸ் ஆகியோர் லண்டன் சென்றிருந்தபோது இதழ்களில் அவர்கள் முதன்மை பெறச் செய்தவர் ரஜனி பாமி தத். 53 ஆண்டுகள் ஓர் இதழுக்கு ஆசிரியராகப் பணியாற்றிய இவரது வரலாறு, ஓர் அரசியல் வரலாறு, ஓர் தொழிற்சங்க வரலாறு, ஓர் இதழியல் வரலாறு எனலாம்