ஆதில் பதிப்பகம், தி.நகர், சென்னை-17. போன்: 044-2431 2686. (பக்கம்: 160.)
வட்டார வரலாறு நூல். முஸ்லிம்களின் கொங்கு நாட்டு வாழ்க்கையை சித்தரிக்கிறது இந்நூல். நொய்யல் நாகரிகம், அரேபிய வணிகத் தொடர்பு, மக்கள் நேசம், சுயமரியாதை இயக்கத்தில் முஸ்லிம்களின் பங்கு, முஸ்லிம் வள்ளல்கள், பொருளாதார முன்னேற்றம், இஸ்லாமிய இதழ்கள் என்பவைகள் இந்நூலின் கருத்துக்களமாக அமைந்துள்ளன. தமிழ் - அரபு மொழி ஒற்றுமை பக்.81-83. இலக்கியப் பகுதிகள் (பக்.91-93) சுவாரஸ்யமானவை. வரலாறு கற்க விழையும் வாசகர்களுக்கு நல்ல நூல்.