பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானி ஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை-600 014. (பக்கம்: 100.)
பாரதிதாசன் பாடல்களிலிருந்து எழுதப்பட்ட ஆறு கட்டுரைகளின் தொகுப்புதான் பாவேந்தரும் விளிம்பு நிலை மக்களும் எனும் இந்த நூல். பாரதிதாசன் பாடல்களில் மலைவாழ் மக்கள் முதலான விளிம்பு நிலை மக்கள் பற்றி இடம் பெற்றுள்ள செய்திகளைத் திரட்டித் தருகிறது ஒரு கட்டுரை.
பாரதிதாசன் பாடல்களில் இடம் பெற்றுள்ள தீபாவளி, பொங்கல் ஆகிய விழாக்கள் பற்றிய செய்திகளைத் தருகிறது அடுத்த கட்டுரை. மீதம் உள்ள கட்டுரைகள் குறள் நெறி, புரட்சிக்கவி, குடும்ப விளக்கு முதலான செய்திகளைத் திறனாய்வு நெறியில் விளக்குகின்றன. பாரதிதாசனின் பன்முகத் தன்மையைக் காட்டும் ஒரு முகமாக இந்த நூல் அமைந்துள்ளது.