விலைரூ.190
புத்தகங்கள்
Rating
பக்கம்: 248
நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் ஆசிரியர். யாரும் அதிகமாய் அறியப்படாத செய்திகளைச் சேகரித்து, ஆராய்ந்து, நேரில் பயணித்து பல அற்புதமான படைப்புகளைத் தமிழுக்குத் தந்த ஆர்வலர்.தாணுமாலயன் கோவில் - நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம் போன்ற இவரது நூல்கள், இவரது எழுத்தாளுமைக்கு எடுத்துக்காட்டாகும். "சிவாலய ஓட்டம் என்ற இப்புத்தகத்தில், நாஞ்சில் நாட்டில் உள்ள, 12 திருக்கோவில்களைப் பற்றி, பல அற்புத செய்திகளைப் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.
முஞ்சிறை - திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, திருப்பள்ளிப்பாக்கம், கல்குளம், மேலங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றிக்கோடு, நட்டாலயம் என, பன்னிரண்டு திருத்தலங்களுக்கு நேரில் சென்று தரிசித்த பேரானந்தம், இப்புத்தகத்தின் வாசிப்பில் கிடைக்கும். கண்கவர், வண்ணப் படங்கள் இல்லாத பக்கங்களே இல்லை என்று, வியந்துப் பார்க்குமளவுக்கு இப்புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது.
பின்னிணைப்பு பகுதியில் பிரதோஷம், சிவராத்திரி தொடர்பான புராணச் செய்திகள், முதலியார் ஆவணம், சாஸ்தா கோவில்கள், சுசீந்திரத்தில் சிவராத்திரி, பல திருக்கோவில் கல்வெட்டுச் செய்திகள் என, பல அரிய செய்திகளை பதிவு செய்துள்ளது சிறப்பாகும். மிக அழகான, நேர்த்தியான கண் கவர் கட்டமைப்பு கவர்கிறது. ஆன்மிக அன்பர்கள் ஒவ்வொருவரும் படித்துணர்ந்து மகிழலாம்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!