திருப்பாவை பாசுரங்களுக்கு விளக்கம் தரும் நுால். ஒவ்வொரு பாடலையும் மனதில் தங்க வைக்கும் வகையில் எளிய நடையில் உரை அமைக்கப்பட்டு உள்ளது.
திருப்பாவை பாடல்களில் உள்ள சொற்களுக்கு தனித்த பொருள் அமைப்பும், அவை சேர்வதால் கற்பனையின் எல்லை விரிவடைந்து நிற்பதையும் குறிப்பிடுகிறது. ஒவ்வொரு பாடலிலும் உள்ள இலக்கியம் மற்றும் பக்திச் சுவையை எடுத்துக் காட்டுகிறது. ஆண்டாளின் கலைத்திறனை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.
திருப்பாவை உட்பொருளையும், அவற்றில் உள்ள நளினங்களையும் எடுத்தியம்புகிறது. பல்துறை சார்ந்த அறிவு உரையில் வெளிப்பட்டுள்ளது. மனித நேயத்தை காட்டும் குறிப்புகளும் தரப்பட்டுள்ளன. திருப்பாவையின் பொருள் இனிமையை உணர்த்தும் உரை நுால்.
– ராம்