இதழ்களில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு நுால். குழப்பம் இன்றி தெளிவாக எளிய நடையில் அமைந்துள்ளன.
பிரபல இசைக்கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமி துவங்கி, எழுத்தாளர் கி.ரா.,வரை, 30 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இசை மேதைகள், இலக்கிய படைப்பாளர்கள், ஆன்மிக பிரமுகர்கள், ஆன்மிகம் மற்றும் மருத்துவம் சார்ந்தவையும் உள்ளன. ஒவ்வொரு கட்டுரையும் புதிய, ஆழமான தகவல்களை தேடிக் கண்டறிந்து தரப்பட்டுள்ளது.
ஒவ்வொன்றும் சுவாரசியம் மிக்கதாக உள்ளன. தகவல்கள் தெளிவுபட உள்ளன. கடும் உழைப்பின் வழியாக தகவல்களை திரட்டி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது தெளிவாக தெரிகிறது. பல்வேறு துறைகளில் பிரகாசித்த பிரமுகர்களை அறிமுகப்படுத்தும் முயற்சியாக மலர்ந்துள்ள நுால்.
– ஒளி